Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

16 வயது சிறுமியை 600 பேர் கற்பழித்த கொடூரம்:! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

16 வயது சிறுமியை 600 பேர் கற்பழித்த கொடூரம்:! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் ஓர் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து,அந்த விடுதியில் சோதனை நடத்தினர்.

அப்பொழுதுதான் மனதை பதறவைக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.அதாவது 16 வயது சிறுமி அங்கு மாட்டிக் கொண்டிருப்பதும்,அந்தத் சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல்தொழில் ஐந்து ப்ரோக்கர் பெண்களே ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த ஐந்து பெண்களான சுமதி, சந்திரா,லக்ஷ்மி,தங்கம், அனார்கலி,மற்றும் உடனிருந்தவர்களான சரவணப்ரபு,ஆட்டோ ஓட்டுனர் சின்னதம்பி உள்ளிட்ட ஏழு நம்பர்களை,போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த 16 வயது சிறுமியை மீட்டு அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு,பின்னர் அந்த சிறுமியை காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர் காவல்துறையினர்.மதுரை மாவட்டத்திலே,காவல்துறையினரால் முக்கிய புள்ளிகளாக தேடப்பட்டு வந்தவர்கள் இந்த ஐந்து பெண் புரோக்கர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த 5 வருடத்தில் 600-க்கும் மேற்பட்ட நபர்களிடம்,அந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் அந்த 600 பேர் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் பல முக்கிய புள்ளிகள் ஈடுபட்டிருக்க வாய்பிருபதாக காவல்துறையினர் சந்தேக்கின்றனர்.

மேலும் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் இது போன்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு சிறுமியை 400 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக, காவல்துறையினர் பல முக்கிய புள்ளிகளை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது வரை விசாரனை நடைபெற்று வரும் நிலையில் , மதுரையில் நடந்த இச்சம்பவம் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version