Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காங்கோ நாட்டில் மர்ம நோயால் 165 குழந்தைகள் உயிரிழப்பு.!! அச்சத்தில் பெற்றோர்கள்.!!

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் தென் மேற்கில் புதுவகையான நோயால் 165 குழந்தைகள் இறந்துள்ளனர்.

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தென் மேற்கில் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து 165 குழந்தைகள் இறந்துள்ளதாக காங்கோ செய்தி இணையத்தளமான ஆச்சுவாலைட் தெரிவித்துள்ளது. மேலும், க்விலு மாகாணத்தின் குங்கு நகரில் புது வகையான நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நோய் 5 வயது வரையிலான குழந்தைகள் அதிக அளவில் பாதிப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலர் மலேரியா போன்ற அறிகுறிகள் இருப்பதாக ரெஜியோர்லால் சுகாதார தலைவர் ஜீன்-பியர் பாசேகே தெரிவித்துள்ளார்.

முகெடி கிராமப்புற கம்யூனிஸ்ட் தலைவர் அலைன் நஜாம்பா கூறுகையில் இந்த நோய் கிராமங்கள் மற்றும் கின்சம்பாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக நான்கு குழந்தைகளை கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version