Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து 18,053 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,42,23,557 என அதிகரித்திருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18,053 என மாறியிருக்கிறது. இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,35,73,094 என இருக்கிறது. அதோடு இந்த நோய் தொற்று பாதிப்புக்காக தற்போது வரையில் சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 1,23,535பேர்.

இந்த நோய் தொற்று காரணமாக 41 பேர் இதுவரையில் பலியாகியிருக்கிறார்கள் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,26,928 என அதிகரித்திருக்கிறது. நாட்டில் இதுவரையில் 207.47 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 17,72,441 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Exit mobile version