Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முத்த போட்டோ.. 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்..!

முத்தம் கொடுத்த போட்டோவை வைத்து சிறுவன் 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வயது வித்யாசம் இன்றி பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம், மும்பையை அடுத்த பாந்தரா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்த சிறுமியின் பிறந்தநாள் கடந்த அக்டோபர் மாதம் வந்துள்ளது. அதற்கு சிறிய பார்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கலந்து கொண்டுள்ளான்.

அப்போது, அந்த சிறுமிக்கு அந்த சிறுவன் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.இதனை அந்த சிறுவன் செல்பியாகவும் எடுத்து வைத்துள்ளான். சில நாட்கள் கழித்து அந்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டுவதாக மிரட்டி அந்த சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவியின் கல்லூரி அருகே சென்ற அவர் அவரை வெளியில் வர சொல்லி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கியுள்ளார் இதனை கண்ட அந்த மாணவியின் தோழி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் மகளிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமையை மாணவி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியைடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version