தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!!

0
233
#image_title

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 170 படமான தலைவர்170 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் டிஜி ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஷ்கரண் தயாரிக்கவுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் 170வது திரைப்படம் இது ஆகும்.

தற்போது இந்த தலைவர் 170 திரைப்படம் பற்றி அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அர்ஜூன் அவர்கள் தலைவர்170 திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தலைவர்170 திரைப்படம் போலி என்கவுன்டர் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகின்றது. தலைவர் 170 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.