சென்ற 2004ஆம் வருடம் இந்தோனேசியாவில் இறக்கின்ற சுமத்ரா தீவு அருகே கடலுக்கு அடியில் உண்டான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி என்ற ஆழிப்பேரலை ஏற்பட்டது. இதில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோரப் பகுதிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த அலையில் சிக்கி பலியானார்கள். இந்த ராட்சத அலையின் காரணமாக, தமிழகத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஆழிப் பேரலையில் சிக்கி பலியானார்கள்.
இந்த துயர சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகள் சென்றாலும் அந்த சோகம் இன்னும் நீங்காத வடுவாக நம்முள் நிறைந்திருக்கின்றது. சுனாமி தாக்கிய டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
அந்த விதத்தில் சுனாமி 17 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் படகில் நின்றபடி கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த நினைவு மேடையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி இருக்கிறார், அந்த பகுதியைச் சார்ந்த மக்களும் நினைவு மலர்தூவி மற்றும் கடலில் பூக்களை கொட்டியும், அஞ்சலி செலுத்தினார்கள். ஒரு சிலர் உயிரிழந்தவர்களின் நினைவுகளை எண்ணி கண்ணீரும் சிந்த தொடங்கினார்கள்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழக மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை நிலைய செயலாளர் ஜி ஆர் வெங்கடேஷ், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன், உள்ளிட்ட ஒரு கடலில் பால் ஊற்றியும், பூக்கள் தூவியும், அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.
தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுச் செயலாளர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பூ உட்பட பல நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் தேசிய செயலாளர் சி டி மெய்யப்பன் ஆர்டிஐ பிரிவு துணைத் தலைவர் மயிலை தரணி செயற்குழு உறுப்பினர் தனியரசு மற்றும் மீனவர் பிரிவு நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். 800 பாரதியார் நகர் கடற்கரை பகுதியில் சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
சென்னை விசைப்படகு மரம் விடும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்கம், சென்னை பைபர் படகு மீன்பிடி தொழிலாளர் நலச் சங்கம், உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சங்கங்கள் சார்பாகவும் சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தியதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. கட்சியினர் அமைப்பினர் அல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய உறவுகளை நினைத்து பால் ஊற்றியும், மலர் தூவியும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள்.
அதேபோல திருவொற்றியூர் கே வி கே குப்பம் மீனவ கிராமத்தில் திருவெற்றியூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே பி சங்கர் தலைமையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், சட்டசபை உறுப்பினர் வடச்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி மாறன், வீராசாமி திருவொற்றியூர் கிழக்குப் பகுதி செயலாளர் தனியரசு மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்டோர் பால்குடம் சுமந்தபடி மவுன ஊர்வலமாக சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.
திமுகவின் மாநில மீனவர் அணி செயலாளர் ஆர் பத்மநாதன் தலைமையில் டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ஏராளமான பெண்கள் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் இருந்து பால்குடம் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று திருச்சினாங்குப்பம் மீனவ கடற்கரையில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதிமுகவின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உட்பட திரளான பெண்கள் திருவொற்றியூர் கடற்கரையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பாக வடச்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம் எஸ் திரவியம் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தாங்கல் கடற்கரையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் கடல் பகுதியில் பால் ஊற்றியும், மலர் தூவியும், மீனவ பெண்கள் அஞ்சலி செலுத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பெண்கள் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள். மீனவர்கள் கடலில் மலர் தூவினர் தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நாகப்பட்டினத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நம்பியார்நகர், கீச்சாங்குப்பம், உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சுனாமி நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார், வேளாங்கண்ணியில் மௌன ஊர்வலம் நடைபெற்றது