19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி!

0
154
19 MPs suspended! DMK MP condemned this!

19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி!

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டு தொடர் கடந்த ஜூலை பதினெட்டாம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்ற வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதி கோரி வருகின்றனர். மேலும் இதற்கு மறுப்பு  தெரிவிக்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்நிலையில் நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மாநிலங்களவையை முடங்கியதால் 19 எம் பி க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது மேலும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 25 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்.ஆர்.இளங்கோ, சண்முகம், கிரிராஜன், எம் எம் அப்துல்லா, கனிமொழி, சோமு, சுஷ்மிதா தேவ்,  டோலாசென்,என சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம் பி க்கள்  இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச விரும்பினால் அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் அந்த வாய்ப்பைக் கொடுக்காமல் நாடாளுமன்றத்தில் இருந்து எம்பிக்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயகத்தை குறுக்கும் செயல் எனவும் கூறினார்.

மேலும் 19 எம்பிகள்  இடைநீக்கம் செய்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் திமுக, திரிணமூல் காங்கிரஸ், உள்ளிட்ட  ஐந்து கட்சிகளை சேர்ந்த 19 எம் பி க்கள்  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறினார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எந்த கோரிக்கையையும் கண்டுகொள்வது இல்லை மேலும் கூட்டு தொடர் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படுவது கட்சியின் ஒரு விதிமுறையாக உள்ளது. மேலும்  கூட்டு தொடரின் போது பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க நாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.