Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

11 வயது சிறுமி திடீர் தற்கொலை! போலீஸ் விசாரணையில் வெளியான பயங்கர பின்னணி!

சென்னை ஆதம்பாக்கத்தில் ரவிச்சந்திரன் வெங்கம்மாள் தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஜெயந்தி என்ற மகளும் இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் ஆந்திர மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. வெங்கம்மாள் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலை வெங்கம்மாள் தன்னுடைய இல்லத்தின் அருகில் இருக்கின்ற கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சிறுவர்கள் மற்றும் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் வீட்டில் ஒரே ஒரு அரை இருப்பதன் காரணமாக, குழந்தை ஜெயந்தி உடை மாற்றுவதற்காக செல்ல இருப்பதாக கூறி அண்ணனை வெளியே போகுமாறு தெரிவித்து இருக்கின்றார்.இந்த சூழ்நிலையில், அந்த சிறுவன் வெளியே சென்றுவிட்டான். இருந்தாலும் வெகு நேரம் ஆகியும் குழந்தை ஜெயந்தி கதவை திறக்க அதன் காரணமாக, சந்தேகப்பட்ட அந்த சிறுவன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்த சமயத்தில் ஜெயந்தி விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இதனை அறிந்த உறவினர்களும் மற்றும் குழந்தைகளின் தாயும் அந்த குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதிருக்கிறார்கள். உடனடியாக இது தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்ற காவல்துறையினர் உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

விசாரணையின்போது சென்ற இரண்டு மாதத்திற்கு முன்னர் அவர் பருவம் அடைந்ததாகவும் இந்த சூழ்நிலையில், நேற்று அவருக்கு வயிற்று வலி அதிகம் இருந்ததாகவும், சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள். இருந்தாலும் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version