Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை! 2 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகள் அபேஸ்!

2 crore cash and 100 pounds of jewels Abes!

2 crore cash and 100 pounds of jewels Abes!

சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை! 2 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகள் அபேஸ்!

கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் மணி ராஜேஸ்வரி இவர் வயது 60. இந்த பெண்மணி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்ற இளம் பெண் ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக அறிமுகமாகி மகள் போல பழகி நம்ப வைத்துள்ளார். அதை நம்பிய ராஜேஸ்வரி வர்ஷினி என்ற இளம் பெண்ணுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளார்.

வர்ஷினி என்ற பெண் தனக்கு தெரிந்த நில புரோக்கர்கள் என்று கூறி அருண்குமார், சுரேந்தர், பிரவீன் ஆகிய மூவரையும் ராஜேஸ்வரிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

கடந்த மார்ச் 21ஆம் தேதி ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்ற நில புரோக்கர்கள், அருண்குமார், சுரேந்தர், பிரவீன் மற்றும் மகளாக பழகிய வர்ஷினி சென்றுள்ளனர், அப்பொழுது வர்ஷினி ராஜேஸ்வரிக்கு சுவையாக சிக்கன் குழம்பு வைத்து சாப்பிட வைத்துள்ளார், அதை சாப்பிட ராஜேஸ்வரி தூங்கச் சென்றுவிட்டார்.

காலையில் எழுந்த ராஜேஸ்வரி வீட்டின் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ராஜேஸ்வரி கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த நில புரோக்கர்கள் அருண்குமார், சுரேந்தர், பீரவீன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.  மேலும் அவர்களிடம் இருந்து 33 லட்சம் பணம் மற்றும் 31 பவுன் நகைகளை மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை கலந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

மேலும் சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை கலந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய வர்ஷினி மற்றும் கூட்டாளி நவீன்குமரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

Exit mobile version