Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்!

#image_title

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்ச் 01) தொடங்கி வருகின்ற 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்கு முன் செய்முறை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12 இல் தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற்றது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய மொழிபாடத் தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்து இருக்கிறது. இதில் மொத்தம் 7,72,200 மாணவ மாணவிகள் மொழிபடாத் தேர்வை எழுதி இருக்கின்றனர்.

தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலை

இன்று எழுதபட்ட மொழிபாடத் தேர்வின் வினாத்தாள் பாட புத்தகங்களுக்குள் இருந்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. படித்த வினாக்கள் மட்டுமே வந்திருந்ததால் தேர்வு எழுத மிகவும் ஈசியாக இருந்தது. இதர தேர்வுகளுக்கும் மொழிபாடத் தேர்வு வினாத்தாள் போல் ஈசியாக இருந்தால் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்று மாணவ மாணவியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கின்றனர்.

Exit mobile version