Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!!

2 hour concession for women employees!! Effective from today!!

2 hour concession for women employees!! Effective from today!!

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!!

கடந்த சனிக்கிழமையன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் இருவரும் இணைந்து அரசானை ஒன்றை வெளியிட்டனர். இதில் புதுச்சேரி அரசு அலுவகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு வெள்ளிகிழமைகளில், அவர்களின் பூஜை மற்றும் வழிபாடுகளுக்காக, காலை 2 மணி நேர பணி சலுகை  அளிக்கப்படும் எனவும், காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை,  மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளில் இந்த அனுமதியை பயன்படுத்திக் கொள்ளலாம் .

விடுப்பு வழங்கும் அதிகாரியிடம் இதற்கான அனுமதியை பெறலாம். பெண்கள் மட்டும் இருக்கும் அலுவலகத்தில், சுழற்சி முறையில் இந்த அனுமதியை பெற்று கொள்ளலாம்.

சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் கல்வித்துறை போன்ற நேரடி பொது சேவை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இந்த சலுகை கிடையாது.

இந்த நேர சலுகை இன்று முதல் அமலுக்கு வந்தது. அனால் இது பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிப்பதாகவும், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version