மீண்டும் 2 லட்சம் டுவிட்டர் கணக்கு முடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்!
உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.அதில் முதலாவதாக டுவிட்டரில் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.அதன் பிறகு டுவிட்டரில் அதிகாரபூர்வ கணக்கு என தொழில் அதிபர்கள் ,பிரபலங்கள் என அனைவரும் பயன்படுத்தி வரும் ப்ளூ டிக் கணக்குக்கான கட்டணத்தை உயர்த்தினார்.
முன்னதாக ப்ளூ டிக் பெற வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகள் சற்று கடினமாக இருந்தது. ஆனால் தற்போது அவை சுலபமாக்கபட்டது.அதனால் போலி தகவல்களை பரப்புவர்கள் அதிகமானார்கள் அதன் காரணமாக ப்ளூ டிக் சேவையை தற்காலிகாமாக நிறுத்திய எலான் மஸ்க் அதற்கு பல கலர்களை உருவாக்கினார்.ஒவ்வொரு துறைக்கும் தனி தனி கலர் வழங்கப்படும் என அறிவித்தார்.
அந்த கலரை டுவிட்டர் நிறுவன குழு பிரித்து தரப்படும் என தெரிவித்தார்.அதன் பிறகு டுவிட்டரில் கேரக்டர் வரம்பு அதிரக்கபட்டது.இந்நிலையில் தற்போது சீனாவின் உகான் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வு சி.ஐ.ஏ.வுடன் கொரோனா வைரஸ்க்கு தொடர்பு இருப்பது போல உள்ளது என பல டுவிட்டர் செய்திகள் பரவியது அதனால் அவர்களுடைய கணக்குகள் முடக்கப்பட்டது.
மேலும் டுவிட்டரில் ரஷியாவின் தலையீடு இருகின்றது என சந்தேகங்கள் உள்ளது.அதனால் அமெரிக்கா அரசு நெருக்கடியை அறிவித்துள்ளது என குளோபல் என்கேஜ்மெண்ட் மையம் தெரிவித்துள்ளது.அதனால் முடக்கப்பட்ட கணக்குகள் விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது.இதற்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க்கும் இதனை ஏற்றுள்ளார்.அமெரிக்காவின் தொடர் நெருக்கடியால் பத்திரிக்கையாளர்கள்,கனடா நாட்டு அதிகாரிகள் உள்பட இரண்டு லட்சம் பேரின் டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.