Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது!!

#image_title

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது.

சென்னை, காசிமேடு, துரை தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (எ) பரத்(21) G.M பேட்டை ரோடு, கொடிமர சாலை, சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த 3 நபர்கள் முன்விரோதம் காரணமாக பரத்குமார் (எ) பரத்தை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் இரத்த காயமடைந்த பரத்குமார் (எ) பரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று காசிமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

காசிமேடு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தாக்குதல் நடத்திய வருண்குமார் (22) , பூபாலன்(21) ஆகிய இருவரை கைது செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட வருண்குமார் காசிமேடு காவல் நிலைய பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 7 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.பூபாலன் மீது 1 அடிதடி வழக்கு உள்ளதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version