Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!!

#image_title

2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!!

இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல்.எதற்கு எடுத்தாலும் கோபம்,டென்ஷன் ஆகுதல்,அதிகம் யோசித்தல்,மனக் கவலை அடைதல் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே பலரது தலை வழுக்கையாகி விடுகிறது.

ஒருமுறை வழுக்கை விழுந்துவிட்டால் மீண்டும் முடி வளர்வது கடினம்.இதனால் பலர் விக் வைத்துக் கொள்கின்றனர்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை பின்பற்றி வந்தால் இளம் வயது வழுக்கை தடுக்கப்படும்.அதுமட்டும் இன்றி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

சின்ன வெங்காயம்
தயிர்

சின்ன வெங்காயம் முடி உதிர்வை கட்டுபடுத்தி எளிதில் முடி வளர வைக்கும் தன்மை கொண்டது.தங்களுக்கு தேவையான அளவு சின்ன வெங்காயம் எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு உரலில் இந்த வெங்காயத்தை போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.உரல் இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும.

பிறகு ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து சின்ன வெங்காய சாற்றை
ஊற்றி கலந்து விடவும்.இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு நின்று முடி வளர்ச்சி
அதிகரிக்கும்.

Exit mobile version