தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது.
மேலும், இந்த நிலையில் மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணியானது சிறிது நாட்களுக்கு முன் முடிந்த நிலையில், தற்போது அவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 19.7.2021 அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மேலும், பள்ளி மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in
மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசியில் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்கள் 22.7.2021 அன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in,www.dge.tn.nic.இந்த அன்று இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் அனைவரும் இணையதளங்களில் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்வது குறித்து மிகவும் மகிழ்ந்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.