Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் இருந்த 2 ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்!

#image_title

இந்தியாவில் இருந்த 2 ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினர். அதன்பிறகு அதில் பணிபுரிந்த பல முன்னணி நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார். 

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உட்பட 4 முக்கிய உயர் அதிகாரிகளையும், சுமார் 7,500 பணியாளர்களையும் அதிரடியாக பணி நீக்கம் செய்தார். இந்தியாவில் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 டுவிட்டர் அலுவலகங்களில் டெல்லி, மும்பையில் இருக்கும் அலுவலகங்களை டுவிட்டர் நிறுவனம் மூடியுள்ளது. 

பெங்களூரு அலுவலகம் மட்டும் இனி தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள 2 அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் இனி வீட்டில் இருந்து வேலை செய்ய எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். செலவை குறைப்பதற்காக இரண்டு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version