சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி வழங்கியது நான் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்து இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது ஆனால் கடந்த 16 தினங்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுகளுக்கும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், 17வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி அதே நிலையில், நீடித்து வருகின்றது.அதன் அடிப்படையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101.40 காசுக்கும், டீசலின் விலை 91.43 காசுக்கும், விற்பனை செய்யப்படுகிறது.