ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை இப்படி பதிவுச் செய்தால் 20% சலுகை:! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

0
121

ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை இப்படி பதிவுச் செய்தால் 20% சலுகை:!பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கொரோனா பரவல் காரணமாக,அனைத்து பொது போக்குவரத்துகளும்,ரயில் சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதத்திலிருந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொது போக்குவரத்துகளுக்கும் ரயில் சேவைகளும்,தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதியிலிருந்து மீண்டும் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கியுள்ளது.
பயணிகளுக்கு தொற்று பரவல் தடுக்கும் வகையில்,மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும்,ரயில் சேவையில் சில மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் பயணச்சீட்டை பெற டிக்கெட் கவுன்டர்கள் முன் கூட்டமாக வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில்,பயணிகள் தங்களது ஸ்மார்ட் போனில்,CMRL என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் QR Code -ன் மூலம் தங்களது டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.இவ்வாறு மின்னணு முறையில் டிக்கட்டுகள் பெறும் பயணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில்,அவர்களின் பயணக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் குறைத்து அதாவது 20 சதவீதம் சலுகை அளிக்கும் திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ஒரு முறை பயண டிக்கெட் மற்றும் ரிட்டன் டிக்கெட்(இருவழி டிக்கெட்) உள்ளிட்ட அனைத்துவித டிக்கெட்டுகளையும் இந்த கியூஆர் தொழில்நுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் QR CODE மூலம் பயணச்சீட்டு பதிவு செய்யும் அனைவருக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பயணிகள் முழு ஒத்துழைப்புதர வேண்டுமென்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.