Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்.. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. பணி இடங்கள், பள்ளி, கல்லூரி, வீடுகள் என பெண்களுக்கு எதிரான பல சொல்லண்ணா குற்றங்கள் நடந்து வருகிறது. அதனை தடுக்க பல குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பது பலரின் கொரிக்கையாக உள்ளது.இந்நிலையில் சிறுமியை பாலியல் வனகொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், வட்டகோட்டை பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வந்தார்.கடந்த 2017ம் ஆண்டு அந்த சிறுமியின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த முதியவர் பரமசிவம். அந்த சிறுமி மட்டும் தனியே இருந்ததை கண்ட அவர் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை தனியாக அழைத்து சென்றார்.மறைவான இடத்தில் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். வெளியில் சென்று வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் மகளின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறுமியிடம் விசாரித்ததில் தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார்.

Exit mobile version