Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகளிருக்கு ரூ 2000 வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்!! உறுதியாக நிறைவேற்றுவோம் என்று ராகுல் காந்தி பேச்சு!!

200 units of free electricity for houses of Rs 2000 per daughter!! Rahul Gandhi's speech that we will definitely fulfill!!

200 units of free electricity for houses of Rs 2000 per daughter!! Rahul Gandhi's speech that we will definitely fulfill!!

மகளிருக்கு ரூ 2000 வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்!! உறுதியாக நிறைவேற்றுவோம் என்று ராகுல் காந்தி பேச்சு!!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் 5 உத்திரவாதங்களை அறிவித்து கட்டாயமாக நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பதவியேற்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும் டி கே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். பின்னர் இவர்களுடன் சேர்ந்து 8 மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி அவர்கள் உரையாற்றினார்.
அப்போது இராகுல் காந்தி அவர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்த கர்நாடக மக்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் துயரத்தில் இருந்திருப்பீர்கள். அந்த  துயரம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகத்தில் வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்து அன்பு ஜெயித்துள்ளது. கட்சித் தேர்தலில் நாங்கள் கூறிய 5 வாக்குறுதிகளை கட்டாயமாக நிறைவேற்றுவோம்.
சொல்வதை செய்வோம். நான் நாங்கள் அறிவித்த இந்த 5 உத்திரவாதங்கள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறது. சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களையும் நடத்தியது தான் இந்த வெற்றிக்கு காரணம். ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும். இந்த 5 உத்திரவாதங்கள் பற்றிய அறிவிப்பு இன்று நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும்” என்று கூறினார்.
Exit mobile version