Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

#image_title

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழக மாநில பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்க கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்க கூடாது என்று அனைத்து நடத்துனர்களுக்கும் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களும் அறிவித்துள்ளதாக தகவல் பரவியது.
இதற்கு மத்தியில் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் எனவும் எந்த தடையும் இல்லை எனவும் பயணிகள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மேலும் வெளிநபர்களிடம் இருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exit mobile version