2000 ரூபாய் திரும்பப் பெறும் பணி! சிக்கல் இன்றி நடக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!!

0
190
#image_title
2000 ரூபாய் திரும்பப் பெறும் பணி! சிக்கல் இன்றி நடக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் பணி சிக்கலின்றி நடைபெறும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் இதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதையடுத்து மக்கள் அனைவரும் பயணிக்கும் பேருந்துகளிலும், இரயில் பயணச் சீட்டு எடுக்கவும் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. வங்கிகளில் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 20000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றா ரிசர்வ் அறிவித்துள்ளது. இதற்கு எந்தவித ஆவணமும் மக்கள் கொடுக்கத் தேவையில்லை என்றும் அறிவித்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் பணி சிக்கலின்றி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
நேற்று அதாவது மே24ம் தேதி இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தாஅ. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் ” 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அனைத்து பணிகளும் சிக்கல் இன்றி நடக்கும். 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம். இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லூ. ரிசர்வங்கி இந்த பணிகளை வழக்கம் போல கண்காணித்து வருகின்றது” என்று கூறினார்.