Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2000 காலிப்பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வந்தாச்சு ரேசன் கடை வேலைவாய்ப்பு!!

2000 vacancies.. Vandachu ration shop job for 10th passed!!

2000 vacancies.. Vandachu ration shop job for 10th passed!!

 

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது.அதன்படி விற்பனையார்கள் மற்றும் கட்டுநர்களுக்கான 2000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: கூட்டுறவு சங்கம்

பணி:

1)விற்பனையார்கள்
2)கட்டுநர்கள்

காலிப்பணியிடங்கள்:

இப்பணிகளுக்கு என்று மொத்தம் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 348 காலிப்பணியிடங்களை நிரப்பட உள்ளது.

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

கல்வித் தகுதி:

விற்பனையாளர்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டுநர்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட உள்ளனர்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்குகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருப்பவர்கள் www.drbchn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

அடுத்த மாதம் நவம்பர் 07 ஆம் தேதி வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150/-

கட்டுநர் பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-

பழங்குடியினர்,ஆதிதிராவிடர்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைப்பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version