2000 ஆண்டுகளுக்கு முந்தைய பீட்சா! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

0
152

2000 ஆண்டுகளுக்கு முந்தைய பீட்சா! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

 

பொம்பெய் நகரில் தநடைபெற்று வரும் தொல்லியல் துறை ஆராயச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு பீட்சாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

தற்போது எல்லாரும் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற ஃபாஸ்ட் புட் உணவுகளை விரும்பி எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் பீட்சா என்ற உணவு தற்போதைய காலகட்டத்தில் வந்த உணவு என்று. ஆனால் பண்டைய ரோமாணியர்கள் இந்த பீட்சா உணவை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சாப்பிட்டு வந்துள்ளனர்.

 

இந்த பீட்சா உணவு பலவகைகளில் கிடைக்கின்றது. பல சுவைகளிலும் கிடைக்கின்றது. சுவைக்கும் வகைக்கும் ஏற்ப பீட்சா உணவின் விலை மாறுபடுகின்றது. இந்த பீட்சா உணவை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தி இருப்பார்கள் என்று கூறினால் நாம் நம்புவோமா? ஆனால் அதற்கான சான்றை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

பண்டைய ரோமானிய நகரமான பொம்பெய் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு இருந்த எரிமலை ஒன்று வெடித்ததன் காரணமாக முற்றிலும் அழிந்து போனது. தமிழகத்தில் எவ்வாறு தொல்லியல் துறை ஆய்வுகள் நடக்கின்றதோ அது போலவே அழிந்து போன பொம்பெய் நகரிலும் தற்பொழுது வரை தொல்லியல் துறை ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது.

 

அழிந்து போன பொம்பெய் நகரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தொல்லியல்துறை ஆய்வாளர்கள் பேக்கரியுடன் இணைந்த ஒரு வீடு கண்டுபிடித்துள்ளனர்.  அந்த வீட்டின் சுவரில் இத்தாலியை சேர்ந்த பீட்சா ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை வைத்து பார்க்கும் பொழுது பீட்சா மாதிரி தெரிகின்றது என்றாலும் இதை பீட்சா என்று ஒத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும் பீட்சாவின் ஆரம்பகால தோற்றமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.