உலகம் முழுவதும் ஊரடங்கு தளர்வு கொடுத்த பின்பே பாதிப்பு உயர்ந்து வருவதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.
முழு உலகமும் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் பாதிப்புகளும், இழப்புகளும் உயர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81 லட்சத்து 36 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது அமெரிக்காவில் நாளொன்றுக்கு 20,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்படுகின்றனர்.
அதே நிலையில், இப்போது இறப்பு நிலையும் குறைந்து வருகிறது. பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் பிரேசிலில் ஒரே நாளில் 23,674 , அமெரிக்காவில் 20,680 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. பல நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் ஏற்பட்டதே பாதிப்பு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. அதன்படி சில நாடுகளில் சுமார் நாளொன்றுக்கு 20,000புதிய தொற்று உறுதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.