மத்திய அரசு வழங்கும் மாதம் ரூ.20000.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!!
மத்திய அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது.ஐந்து வருட கால திட்டமான மூத்த குடிமக்கள் திட்டத்தில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பணத்தை முதலீடு செய்ய முடியும்.
இந்த திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ள முடியும்.இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்தகுடிமக்களுக்கு வரி சலுகைகள் வழங்கப்படுகிறது.அதன்படி வருமான வரி சட்ட பிரிவு 80c -யின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை பெற முடியும்.
மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.30,00,000 வரை முதலீடு செய்ய முடியும்.முதிர்வு காலத்திற்கு முன்னதாக பணம் எடுத்தால் 1% வட்டி குறைக்கப்பட்டு முதிர்வு தொகை வழங்கப்படும்.
மத்திய அரசின் அஞ்சல் திட்டங்களில் முக்கிய திட்டமாக உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு தற்பொழுது 8.2% வட்டி வழங்கப்படுகிறது.முதுமை காலத்தில் அதிக ரிஸ்க் இல்லாத திட்டத்தில் சேமிக்க வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு அஞ்சலின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் சிறந்த தீர்வாக இருக்கும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வருமானம் தங்கள் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.இந்த திட்டத்தில் நாமினி வசதியும் உள்ளது.தாங்கள் தனியாக அல்லது துணையுடன் இந்த முதலீட்டை தொடங்க முடியும்.
அதேபோல் ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமாலும் தொடங்கி முதலீடு செய்யலாம்.ஆனால் முதலீடு வரம்பு ரூ.3,000,000க்குள் வேண்டும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில்(SCSS) கணக்கு தொடங்க தேவைப்படும் ஆவணங்கள்:
1)வயது சான்றிதழ்
2)மூத்த குடிமக்கள் அட்டை
3)பான் கார்டு
4)ஓட்டுநர் உரிமம்
5)ரேசன் கார்டு
6)ஓட்டர் ஐடி
இந்தியா முழுவதும் உள்ள எந்த ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் இந்த முதலீட்டை தொடங்கலாம்.