விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர சிறந்த திட்டம் வகுப்பவருக்கு 20,000 டாலர் பரிசு!! நாசா அறிவிப்பு!!

0
134

இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். அவரை ஏற்றி சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் பழுதானதால் அவரை அழைத்து வராமல் பூமிக்கு திரும்பிவிட்டது.

 

சுனிதா வில்லியம்ஸை மீட்டு வரும் பொறுப்பு, போயிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.

 

இதற்காகத்தான் ஸ்டார் லைனர் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ‘ஸ்டார்லைனரின்’ பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

 

இந்த சூழ்நிலையில் சுனிதா வில்லியம்சை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு அழைத்து வந்து விடுவோம் என்று நாசா தெரிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓராண்டு காலம் ஆகுமா என்று கேள்விகள் எழுந்த நிலையில் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

 

பொதுவாக விண்வெளி வீரர்களின் பயண காலம் 6 மாதங்கள் வரை இருக்கும். எனவே சுனிதா விண்வெளியில் பாதுகாப்பாக இருக்கிறார். இஸ்ரோ நினைத்தால் சுனிதாவை அழைத்து வர முடியும். ஆனால் அதற்கு எந்த அவசியமும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நாசா விண்வெளி மையத்தில் சூழ்நிலையானது இப்படி இருக்கும் தருணத்தில் தற்பொழுது, அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், ” விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் சிறந்த திட்டத்திற்கு 20 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற கூறப்பட்டுள்ளது”. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் நாசா இவ்வாறு தெரிவித்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.