2025ம் ஆண்டு உணவுக்கு திண்டாட்டம் தான்! இனி சாப்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் அரசின் உத்தரவு!
கடந்த ஆண்டு வடகொரியாவில் பெருமளவு வெள்ளம் பேரிடரர் ஏற்பட்டது. அதனால் பல பயிர்கள் நாசம் ஆனது. மேலும் அதிலிருந்து மீளமுடியாமல் இன்றளவும் வட கொரிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பயிர்கள் மட்டுமின்றி பல உயிர்களையும் இழக்க நேரிட்டது. அதுமட்டுமின்றி தற்போது கருணா அச்சுறுத்தல் காரணமாக வடகொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளது. அதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் எந்த ஒரு பொருள்களும் கொண்டுவர முடியவில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் உணவுப்பொருள்கள் எரிபொருள்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் என அனைத்தையும் சீல் வைத்து தற்பொழுது மூடியுள்ளது.
அதனால் வடகொரியாவின் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலராக காணப்படுகிறது. நமது இந்திய ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை ரூ 3,300 ஆகும். இதனால் வட கொரிய மக்கள் மிக கடுமையான உணவுப் பஞ்சத்தில் உள்ளனர். அதனால் அந்நாட்டு அரசாங்கம் மக்களை 2025ம் ஆண்டு வரை குறைவாக உணவை உண்ண வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளார். உத்தரவை அறிந்த இதர நாட்டினர் வட கொரிய அதிபரை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் வடகொரியாவின் சீனுயீஜூ நகரத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் நியாயத்தை கேட்கும் விதமாக சில கேள்விகளை கேட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது, 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைவாக உணவு உண்ண வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இது எப்படி சாத்தியமாகும். அதுமட்டுமின்றி வெள்ளப்பெருக்கால் தற்பொழுது பயிர்கள் இன்றி வடகொரியா பஞ்சத்தில் உள்ளது. அப்படி இருக்கும் வேளையில் உணவு கையறு நிலையும் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் தினமும் உண்ண வேண்டிய உணவு கிடைக்கவே பற்றாக்குறையாக உள்ளது. இதனால் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றோம். எங்களின் உணவுத்தேவையை எப்படி சமாளிப்போம் என்று எங்களுக்கு தெரியவில்லை என அந்நகர மக்கள் கூறினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக வடகொரிய அரசு கூறியது, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வடகொரியா அதன் எல்லைகளை மூடியது அதனால் தொற்று பாதிப்பு குறைந்து நடைமுறை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதேபோல இந்த உணவு பஞ்சத்தையும் சமாளிக்க நேரிட்டு கடந்து வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளனர்.