இரண்டு ரயில் சேவைகளையும் இணைத்து 2025 ஆம் ஆண்டு இயக்கப்படும்!! சென்னை போக்குவரத்து அதிகாரிகள்!!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஜூலை 19 ஆம் தேதி ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் 1, 205 கோடி ரூபாயில் டாடா ப்ராஜெக்ட் நிறுவனத்துடன் ரயில் நிலையம் கட்டுமானத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னையில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் அதிக அளவு மின்சார ரயில் சேவை கொண்டுவரப்பட்டது.
மேலும் குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகரப் பகுதிகளுக்கு அதிக அளவில் மின்சாரா ரயில் இயக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் தற்போது பல பகுதிகளில் மெட்ரோ ரயில் உடன் விரைவு ரயில்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் விரைவு ரயில் நிலையத்தை சீரமைத்து மெட்ரோ ரயில் நிலையமாக மாற்ற சி எம் டி ஏ ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த மெட்ரோ ரயில் சென்னை விரைவு ரயில் சேவை 2025 ஆம் ஆண்டு தான் இணைக்கப்பப்டும் என்று சென்னை போக்குவரத்தது அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.