நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!!
அதிமுக கட்சி ஒரே அணியாக சேரும் என்றும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் என்றும் வி.கே சசிகலா அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொண்டிகுளத்தில் வி.கே சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் வி.கே சசிகலா அவர்கள் “ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் மட்டும் தான்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கப் போகிறது. அதாவது தற்பொழுது அதிமுக மூன்று அணியாக இருக்கின்றது. டிகிரி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மூன்று அணியாக அதிமுக கட்சியை பிரித்து வைத்துள்ளனர். இவர்கள் மூவரும் ஒன்று சேரும் வாய்ப்பு தற்பொழுது வந்துள்ளது. அதிமுக ஒரே அணியாக மாறப்போகின்றது.
2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் திமுக கட்சிக்கும் நேரடியான போட்டி நிலவும். அந்த தேர்தலில் நான் யார் என்பதை மக்கள் அனைவருக்கும் காட்டுவேன். தற்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் என்ன ஆகும் என்பதை கணித்து வைத்துள்ளேன்.
அதிமுக கட்சியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சண்டை பங்காளி சண்டை போலத்தான். அதிமுக இடையே ஏற்பட்டுள்ள பிரிவு தற்காலிகப் தான். 2026 சட்டமன்ற தேர்தலில் தற்பொழுது மூன்று அணியாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒரே அணியாக மாறி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.