2027-ஆம் ஆண்டு விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்! உடனே ப்ரீ புக் செய்யுங்கள் !

0
97
2027 can travel to space! Pre-book now!

உலக நாடுகள் இன்று வரை விண்வெளிக்கு  ஆராய்ச்சிக்காக மட்டுமே விண்கலங்கள் வாயிலாக வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளது. ஆனால் தற்போது சுற்றுலாவிற்காக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் வகையில்  தொழில்நுட்பங்கள் வளர்ந்து உள்ளது.  முதல் முறையாக  ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் ஜாரெட் ஜசக் மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு விண்வெளி சுற்றுலா சென்று வெற்றிகரமாக திரும்பினார்கள்.

இந்த நிலையில் விண்வெளி சுற்றுலா ஆய்வு  நிறுவனங்கள்  தீவிரமாக செயல்பட தொடங்கினார்கள்.  இதில் சீனாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான  ப்ளூ ஓரிஜின் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கின்றது.  விண்வெளி சுற்றுலாவுக்கு மறு பயன்பாட்டிற்கு உள்ள ராக்கெட்டுகளை  பயன்படுத்துவதாக  இந்த நிறுவனம்  கூறுகிறது.  இந்த நிறுவனம், 2027 ஆம் ஆண்டு விண்வெளி சுற்றுலாவுக்கான முதல் இரு டிக்கெட்டுகளை விற்பனை செய்ய  இன்று  தொடங்கியுள்ளது.

இந்த டிக்கெட்டுகள் விலை இந்திய மதிப்பு படி ஒரு கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். சாதரண நடுத்தர மக்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சுற்றுலா செல்வது என்பது அவர்களிடத்தே பெரிய விசியமாக பார்க்கப்படுகிறது, இந்த விண்வெளி சுற்றுலாவை அவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாது  என்பதுதான் உண்மை .