Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!!

#image_title

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!!

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தந்து விட்டதால் தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை ஏதும் வைக்கப்படவில்லை .

புதுடெல்லியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம் புதுடில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ் கே ஹல்தார் அவர்களது தலைமையில் புதுடில்லி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு அரசின் துறை நீர்வள ஆதாரத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. அவர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் திரு சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 11:45 மணிக்கு தொடங்கி கூட்டம் 1:30 மணி அளவில் நடைபெற்றது.

பருவ மழை மற்றும் பாசன ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில் காவிரியில் மழை அளவு, நீர் வரத்து, நீர் இருப்பு தரவுகள் உள்ளிட்ட மற்ற அம்சங்கள் குறித்தும், பாசன காலத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேகதாது அனை விவகாரம் தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அது குறித்து விவாதிக்க கூடாது என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை எற்று, மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா தமிழ்நாடு இரு தரப்பிலும் விவாதிக்கவில்லை.

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தந்து விட்டதால் அது தொடர்பாக கோரிக்கை ஏதும் வைக்கப்படவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அரசு அதிகாரிகள் தகவல்.

Exit mobile version