Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை:! RBI அதிரடி உத்தரவு!

அடுத்த மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை:! RBI அதிரடி உத்தரவு!

அண்மையில் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது!

அக்டோபர் மாதத்தில் அதிக பண்டிகை நாட்கள் வருவதால் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ஆர்பிஐ அறிவித்தது.இந்த அறிவிப்பில் குழப்பம் நீட்டிக்கவே ஆர்பிஐ இதற்கு விளக்கம் அளித்துள்ளது.அடுத்த மாதம் நாடு முழுவதும் அதிக பண்டிகை தினங்கள் கொண்டாடப்படுவதால் 21 நாட்கள் விடுமுறை என்று பொதுவாக கூறப்பட்டது.ஆனால் இது அந்தந்த மாநிலத்தின் பண்டிகை தினங்களுக்கு ஏற்ப விடுமுறைகள் மாறப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி,அக்டோபர் 4,5 ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி,அக்டோபர் 8 மிலாடி நபி, அக்டோபர் 9,22 இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமை, அக்டோபர் 23 24 தீபாவளி ஆகிய எட்டு நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என ஆர்பிஐ விளக்கமளித்துள்ளது.

Exit mobile version