ADMK : 2016 ஆம் ஆண்டே சட்டத்திற்கு புறம்பாக குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக சிபி-ஐக்கு புகார் போனதையடுத்து சோதனை நடைபெற்றது. இதன் பின்னணியில் பல அரசு நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததும் அம்பலமானது. அச்சமயமே அக் கிடங்கு உரிமையாளரான மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்கொண்டு இதற்கு உதவி புரிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என பலரும் இந்த வழக்கின் கீழ் வந்தனர். முதலில் சிறப்பு நீதிமன்றத்தில் கிடங்கு உரிமையாளர் என தொடங்கி ஆறு பேர் மீது மட்டும் சிபிஐ ஆனது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இது குறித்து மேற்கொண்டு விசாரிக்கையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான பி வி ரமணா, விஜயபாஸ்கர், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் முன்னாள் டிஜிபி டி கே ராஜேந்திரன் என 21 பேர் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவர்களுடைய குற்றப்பத்திரிக்கையானது தற்பொழுது சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகும் பட்சத்தில் நகல் வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி 400 பக்கங்கள் கொண்ட மூத்த பத்திரிக்கை தாக்கலும் 492 ஆவணங்கள் கொண்ட மின்னணு குற்ற பத்திரிக்கை ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அதனை நகலாக பெற்று சென்றுள்ளனர்.