Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை – ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

#image_title

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கீழ் கதிர்ப்பூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 182 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மோசடி செய்த அப்போது வேலை பார்த்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் தனியார் அரசு ஒப்பந்ததாரர் என ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐஐடி நிபுணர்கள் மற்றும் கட்டிட நிபுணர்கள் ஆய்வு செய்ததில் முறைகேடு உறுதியானது.

வீடுகளை தரமாக கட்டாமல் திட்டமிட்ட படியும் கட்டாமல் ஒப்பந்ததாரர்களுக்கு லாபமாக அமையும் வகையில் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த குடியிருப்புகள் மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிபி தேவதாஸ் ஓய்வு பெற்ற சூப்பிரண்ட் இன்ஜினியர், மாலா செயற்பொறியாளர், தற்போது சென்னையில் சூப்பரண்டண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் ராஜா , பொறியாளர் சுந்தரமூர்த்தி தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார், பொறியாளர் திருப்பதி என்கிற ஐந்து அதிகாரிகள் மற்றும் பி என் ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்று நிறுவனத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சரண் பிரசாத் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version