உதயநிதி மீது 22 வழக்குகள்.. அவரது வெற்றி செல்லாது! வெளிவந்த ஆதாரம் பதவிக்கு வந்த சிக்கல்!

0
176
22 cases against Udayanidhi.. His victory is void! The source of the problem came to the post!

உதயநிதி மீது 22 வழக்குகள்.. அவரது வெற்றி செல்லாது! வெளிவந்த ஆதாரம் பதவிக்கு வந்த சிக்கல்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். இவருக்கு எதிராக போட்டியிட்ட ரவி இவரது வெற்றியானது உண்மையல்ல எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரவி உதயநிதி மீது சுமத்தும் குற்றங்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் இந்த வழக்கை ரத்து செய்தார். ஆனால் இவருக்கு எதிராக போட்டியிட்ட ரவி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில், உதயநிதி வேட்பு மனு தாக்கல் செய்கையில் பொய்யான தகவல்களை பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக எந்த ஒரு வழக்கும் என் மீது இல்லை என்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் உதயநிதி மேலோ கிட்டத்தட்ட 22 வழக்குகள் தற்போது வரை உள்ளது. அதை வைத்துப் பார்க்கையில் உதயநிதி அளித்த வேட்பு மனு தாக்கல் முற்றிலும் பொய்யானது. எனவே அவர் வெற்றியடைந்ததை நிராகரிக்கும்படி கூறியுள்ளார். இது குறித்து வழக்கு சில தினங்களில் விசாரணைக்கு வர இருக்கிறது. உதயநிதி மேல் உள்ள குற்றமானது நிரூபிக்கப்பட்டால் அவரது பதவி பறி போகலாம் என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.