அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மரண ஓலங்கள் நாடெங்கிலும் கேட்டு கொண்டே இருக்கிறது.
அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி இடம் இல்லாமல் மக்கள் தவிப்பு, மயானங்களில் எரிக்க கூட முடியாத அவல நிலை என்று மக்கள் பல போரட்டங்களை சந்தித்து வருகின்றனர்.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 2500 பேர் வரை கொரோனா தொற்றின் காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொவிட் கேர் சென்டர் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோன சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள், மூச்சு திணறல் அதிகரித்து அடுத்தடுத்து மரணிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 5 பெண்கள் மற்றும் 17 ஆண்கள் என்று 22 பேர் என்று கொரோனா வார்டில் உயிரிழந்தனர்.இதில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது எனவும், மற்றவர்கள் அனைவரும் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தவர்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் அனைவரும் தொற்றின் அறிகுறி ஏற்பட்டால் சுய மருத்துவம் பார்த்து, அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கும் சிகிச்சை பெற முடியாத பட்சத்தில் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு கால தாமதமாக வருவதால் மக்களின் உயிர்களை காக்க முடியவில்லை, இதுவே கொரோனா வார்டில் அதிக உயிரிழப்பு ஏற்பட காரணமாக உள்ளது.