பயங்கரவாதி அட்டகாசத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!சாலைநெடுவிலும் கொல்லப்பட்ட சடலங்கள்!!
ஒவ்கடங்கு பகுதியில் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் அமைந்துள்ள பர்கினோ பசோ. மேலும் இது நைஜீரியா மாலி போன்ற சில நாடுகளை எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டில் அல்கொய்தா ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க இந்நாட்டு பாதுகாப்பு படையினர் உயிரையும் பனையம் வைத்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பர்கினோ பாசோவின் கோஷி மாகாணத்தின் போர்ஸோ நகரில் உள்ள கிராமத்தில் பொதுமக்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர் மேலும் காயமடைந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத குழுக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பர்கினோ பாசோவின் கோஷி மாகாணத்தின் போர்ஸோ நகரில் உள்ள கிராமத்தில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.