Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது 23வது நோய்த்தொற்று தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாநில அரசு சார்பாக தடுப்பூசிகள் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக செலுத்தப்பட்டு வந்தது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது ஆனாலும் அந்த தடுப்பூசி செலுத்தும் செயலில் பெரிய அளவில் வேகம் தென்படவில்லை.

இந்த நிலையில், சென்ற வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து திமுக மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி வேகப் படுத்தப்பட்டது. அதாவது தமிழ்நாடு முழுவதும் மாதம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், நோய்த்தொற்று பரவல் பரவ தொடங்கியதையடுத்து இந்த தடுப்பூசி முகாம் மெல்ல, மெல்ல, குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

ஆனாலும் தற்சமயம் மீண்டும் இந்த தடுப்பூசி முகாம் தொடங்கியிருக்கிறது. அதாவது தமிழகத்தின் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக வாரத்தில் ஒரு நாள் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது.

அந்த கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று 50,000 பகுதிகளில் 23வது மகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது சென்னையில் மட்டும் 1600 பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை கேகே நகர் பகுதியில் சிறப்பு முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் மற்றும் சென்னை மாநகர மேயர் ஆர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டு தடுப்பூசி முகாமை ஆரம்பித்து வைத்தார்கள்.

இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version