Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஞானசேகரனை தப்பிக்க வைக்க திமுக போடும் பிளான்.. சாட்டையை சுழற்றினாலாம் வேலைக்கே ஆகாது!!

DMK's plan to escape Gnanasekaran.. Swinging the whip will not work!!

DMK's plan to escape Gnanasekaran.. Swinging the whip will not work!!

DMK: பாலியல் வழக்கிலிருந்து ஞானசேகரன் தப்பிக்க திமுக வழியமைத்து கொடுக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

திமுக ஆட்சி மீது மிகப்பெரிய கொந்தளிப்பில் மாற்று கட்சியினர் உள்ளனர். குறிப்பாக இவர்கள் ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கானது பூதாகரமாக வெடித்துள்ளது. ஏதேனும் மிகப்பெரிய அசம்பாவிதம் தமிழகத்தில் நடந்தால் அதன் பின்னணியில் திமுக இருக்கிறது.

அப்படித்தான் இந்த அண்ணாமலை பலகலைக்கழக  விவகாரமும், இதில் குற்றவாளியாக உள்ளவர் சைதை கிழக்கு தொகுதியின் இளைஞரணி நிர்வாகி என தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர் மீது பல பாலியல் ரீதியான வழக்குகளும் நிலுவையில் தான் உள்ளதாம். அந்தவகையில் திமுக, குற்றாவளிகளின் கூடாரமாகவே செயல்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வினோத கவன ஈர்ப்பு போராட்டத்தை அறிவித்தார்.

அதன் படி இன்று அவரது இல்லத்தில் 6 க்கும் மேற்பட்ட சவுக்கடிகளை தனக்குத்தானே கொடுத்துக் கொண்டார். மேற்கொண்டு காலணிகளை  அணிய மாட்டேன் எனவும் கூறியுள்ளார். இவையனைத்தையும் முருக பெருமானிடம் முறையிடுவதாக கூறியுள்ளார். நம்மை வருத்தி செய்யும் செயலுக்கு சக்தி என்பது இருக்கிறது. அது கட்டாயம் பலனளிக்கும் என கூறியுள்ளார்.

மேற்கொண்டு நேற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அதிமுக பாஜக என பலரும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது. குற்றவாளியான ஞானசேகரன் வழுக்கி விழுந்ததாக கை மற்றும் கால்களில் அடிப்பட்டு கட்டு போட்டுள்ளனர். ஆனால் அது, திமுக அவரை வெளியே விட முயற்சிக்க உணடாக்கிய ஓட்டை தான் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். ஞானசேகரன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பொறுத்தே திமுக எந்த அளவிற்கு இந்த விவகாரத்தில் வீரியம் காட்டுகிறது என்பது தெரிய வரும்.

Exit mobile version