தெற்கு இரயில்வேயில் 2438 காலிப்பணியிடங்கள்! ஆகஸ்ட் 12 தான் கடைசி நாள்! 

0
215
2438 Vacancies in Southern Railway! August 12 is the last day!
தெற்கு ரயில்வேயில் 2438 காலிப்பணியிடங்கள்!! ஆகஸ்ட் 12 தான் கடைசி நாள்!!
தமிழகத்தில் தெற்கு இரயில்வேயில் காலியாக இருக்கும் 2438 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு இரயில்வேயில் 2024 மற்றும் 2025 அதாவது ஒரு வருடம் அடிப்படையில் அப்ரண்டிஸ் அடிப்படையில் ஆட்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான அறிவிப்பை தெற்கு இரயில்வே இன்று(ஜூலை 22) வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று(ஜூலை 22) காலை 10 மணிமுதல் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 2438 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
அதில் பெரம்பூரில் செயல்பட்டு வரும் கேரேஜ் வேலைக்கு 1337 பேரும், பொன்மலையில் உள்ள மத்திய தொழிற்கூடத்திற்கு 379 பேரும், போத்தனூர் சிக்னல் கூடத்திற்கு 722 பேரும் என்று மொத்தமாக 2438 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பிட்டர், வெல்டர், மிசின் ஆப்பரேட்டர், கம்பியூட்டர் ஆப்பரேட்டர் போன்ற பல வகையான காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுப் பிரிவினருக்கு 100 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் பெண்களுக்கும் கட்டணம் எதுவும் இல்லை.
இந்த பணிக்கு ஆன்லைனில் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://sr.indianrailways.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.