Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூடானில் இருந்து 247 பேர் மீட்பு!! அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!!

#image_title

சூடானில் இருந்து 247 பேர் மீட்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது.

சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

மும்பை, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 12 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். விமான நிலையம் வந்தவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலாநிதி வீராசாமி வரவேற்றார்.

அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:- சூடான் நாட்டில் இருந்து இதுவரை 247 பேர் மீட்கப்பட்டு தமிழகம் வந்துள்ளனர்.

தமிழர்கள் அங்கு உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்த தகவல்களை சேமித்து அவர்களை மீட்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு சென்று சேரும் வரை முதலமைச்சர் உத்தரவின் பேரில் முழு செலவை அரசு ஏற்று கொண்டு உள்ளது என தெரிவித்தார்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த அனுபிரியா கூறுகையில், எங்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்த தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கு நன்றி. சூடானில் போர் நடப்பதால் எப்படி இந்தியா திரும்புவோம் என பயந்து இருந்தோம்.

வீட்டில் வெடுகுண்டு சத்தம் கேட்டு தான் கண் விழித்தோம். நகரை விட்டு புறநகர் பகுதிக்கு சென்றோம். உணவு, குடிநீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். தூதரக அதிகாரிகள் முலம் எங்களை மீட்கப்பட்டோம் என்றார்.

திருவள்ளுரை சேர்ந்த ரமேஷ் பேசுகையில், சூடானில் இருந்து அழைத்து வர உதவிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வீட்டு வரை எங்களை பத்திரமாக அழைத்து வர உதவிய அதிகாரிகளுக்கு நன்றி.

மின்சாரம், உணவு இல்லாமல் சிரமப்பட்டோம். பயந்து போய் இருந்தோம். நல்லப்படியாக வந்து சேர்ந்து உள்ளோம் என கூறினார். பின்னர் மீட்கப்பட்டு வந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கார்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Exit mobile version