Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் ஜோதிகா!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

After 25 years, Jyothika is back in Hindi!! Fans in celebration!!

After 25 years, Jyothika is back in Hindi!! Fans in celebration!!

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் ஜோதிகா!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
நடிகை ஜோதிகா அவர்கள் அடுத்தாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஜோதிகா அவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஹிந்தியில் மீண்டும் நடிக்கப் போகிறார்.
1998ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான டோலி சாஜ கே ரக்னா திரைப்படம் மூலமாக சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, கன்னனடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன் பிறகு 25 ஆண்டுகள் கழித்து நடிகை ஜோதிகா அவர்கள் மீண்டும் ஹிந்தியில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை ஜோதிகா அடுத்து ஹிந்தியில் நடிக்கப் போகும் திரைப்படத்தை இயக்குநர் விகாஷ் பால் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் மாதவன் இந்த திரைப்படத்தில் ஜோதிகா அவர்களுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். திரில்லர் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் மாதவன் இருவரும் இணைந்து நடிக்கும் நான்காவது திரைப்படம் இது.அதுமட்டுமின்றி  நடிகை ஜோதிகா நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான லிட்டில் ஜான் திரைப்படம் ஹிந்தியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version