Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே இடத்தில் 25 நல்ல பாம்புகள் !! அதிர்ச்சியில் மக்கள்

புதுச்சேரியில் வீட்டுக்குப் பின்னால் 25 நாகப்பாம்புகள் கண்டெடுக்கப்பட்ட தில் மக்கள் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி பகுதியில் பாகூர் பங்களா வீதியை சேர்ந்த புவியரசன்(25) என்பவர் கட்டிட தொழில் செய்து வருகின்றார். புவியரசன் மற்றும் அவரது தாயார் சிமெண்ட் சீட் போட்ட வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது, திடீரென நல்ல பாம்பு குட்டி ஊர்ந்து செல்வதனை புவியரசன் கண்டு பதற்றம் அடைந்தார்.உடனடியாக பாம்பு பிடிக்கும் சமூக ஆர்வலரான விக்கி என்கின்ற விக்னேஷ் என்பவரை வரவழைத்துள்ளார்.

பின்பு பாம்பு குட்டிகள் வீட்டின் பின்புறத்தில் கிடைக்கப்பட்ட பகுதியில் இருக்கிறதா? என தோண்டி பார்த்தனர் .அப்பொழுது ஏராளமான பாம்பு குட்டிகள் இருப்பதை கண்டனர்.அதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பாம்புகளை அவர் பிடித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு நல்ல பாம்பு முட்டையிட்டு ‘இரையை தேடி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் குட்டிகளைத் தேடி நல்லபாம்பு எப்போதும் வேண்டுமானாலும் வரலாம் என அச்சமும் ஏற்பட்டுள்ளது. பின்னர் பிடிக்கபட்ட நல்ல பாம்பு குட்டிகள் பாகூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Exit mobile version