தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!
அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான் அரசு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இருந்தாலும், இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.
அதன் படி தனியார் பள்ளிகளில் படிக்கும் 25 சதவீத குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை, அந்த பள்ளிகளுக்கு அரசு செலுத்தும். இது வரை இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 98 ஆயிரம் குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்கள் சுமார் 85 ஆயிரம் இடங்கள் உள்ளது. இதற்காக விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கியது.
இன்று இந்த விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாளாகும். மொத்தமாக உள்ள 7,738 தனியார் பள்ளிகளில் இருப்பது 85 ஆயிரம் இடங்களே. ஆனால் இது வரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 872 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் இன்று கடைசி நாளாததால் விருப்பம் உள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.