பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு படங்களை கற்பிக்கும் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இவற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசானது கடுமையான திட்டம் ஒன்றை முன்மொழிந்தது. அதன்படி தற்பொழுது பாலியல் புகார்களில் சிக்கிய 25 ஆசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக மாறி இருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்தபடி, இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற அதாவது ஆசிரியர்களால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பாலியல் புகார்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்து அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 238 ஆசிரியர்களை குற்றவாளிகள் என கண்டறிந்து அவர்களின் 25 பேர் மீது பாலியல் புகார்கள் சட்டப்படி நிரூபிக்கப்பட்டதன் பெயரில் அவர்களை பணிநீக்கம் செய்ததோடு அவர்களுடைய படிப்பு சான்றிதழ்களும் தடை செய்யப்பட்டு இருப்பது பாலியல் குற்றங்களில் ஈடுபட நினைக்கும் மற்றும் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறி இருக்கிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஆசிரியர்களின் விவரங்கள் பின்வருமாறு :-
✓ தொடக்கக் கல்வித்துறையில் மொத்தம் 15 ஆசிரியர்கள்
✓ திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, புதுகை, விழுப்புரம், தர்மபுரி, நெல்லை மாவட்டங்களில் தலா ஓர் ஆசிரியர் என மொத்தம் 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகள் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.