டிசம்பர் 27 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

0
274
#image_title

டிசம்பர் 27 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

கடலூர் மாவட்டம் சிதம்பர நடராஜர் கோயிலில் டிசம்பர் 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற இருக்கிறது. சிதம்பர நடராஜருக்கு ஆண்டில் ஆறு முறை சிறப்பு அபிஷே அலங்காரம் செய்வது வழக்கம். அதிலும் மார்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் ஆருத்ரா அபிஷேக பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டால் எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.

இந்த ஆருத்ரா தரிசனம் காரணமாக வருகின்ற 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படி இந்த நாளில் கல்வி நிலையங்கள், மாநில அரசு அலுவலகங்கள் ஆகியவைகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமான அடுத்த 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 06(சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டிசம்பர் 27 அன்று அவசர பணிகளை கவனிக்கும் அலுவலங்கள் எப்பொழுதும் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.