மத்திய அரசின் அதிர்ச்சித்தகவல்! நாட்டில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று பாதிப்பு!

0
103

நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது ஆனாலும் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக, நோய்களின் தீவிரம் ஒரு காட்டுக்குள் இருந்து வருகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில் கடந்த 4 தினங்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இப்படியான சூழ்நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,03,70,500 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,03,73,500 ஆக இருக்கிறது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 173 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள், இதுவரையில் ஒட்டுமொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 4, 91,700 ஆக அதிகரித்திருக்கிறது. அதோடு நோய் தொற்றிலிருந்து 3,6, 357 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நாடு முழுவதிலும் இருக்கின்ற பல்வேறு மருத்துவமனைகளில் 22,02,472 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் நேற்று வரையில்1,63,84,39,207 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 19.59 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது, சிகிச்சை பெறுவோரின் விகிதம் 5.46 சதவீதமாக இருக்கிறது.