அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்!!

0
97

 

அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்..

 

கடந்த ஜூன் மாதத்தில் முன்னர் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில்விபத்தில் பலியானவர்களில் இன்னும் 29 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி ஒடிசா மாநிலம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது பயணிகள் இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 293 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து அடையாளம் காணப்படாத 81 பேர்களின் உடல்கள் புவனேஸ்வரத்தில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையித் வைக்கப்பட்டிருந்தது.

 

இந்த அடையாளம் தெரியாத உடல்களை கண்டுபிடிக்க அதாவது ஒரு உடலுக்கு பல குடும்பத்தினர் உரிமை கோரினர். இதையடுத்து மரபணு சோதனை மூலம் உடல்களை கண்டறியும் பணியில் இரயில்வே துறையும், புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையும் ஈடுபட்டது. முதல் கட்டமாக 103 பேர்களுக்கு மரபணு செய்யப்பட்டது. இதில் 52 பேர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. அடையாளம் காணப்பட்ட உடல்கள் அவரவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

இரண்டாம் கட்டமாக மரபணு சோதனை செய்யப்படுவதற்கு மரபணு மாதிரிகளை டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மரபணு மாதிரிகளின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட மரபணு சோதனை முடிவுகளுக்கு பிறகும் உரிமை கோராமல் இருக்கும் சடலங்களை தகனம் செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கவுள்ளது.

 

இதையடுத்து ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தோர்களில் இன்னும் 29 நபர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. அடையாளம் காணப்படாத 29 சடலங்கள் புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டெய்னர்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.