முருகப் பெருமானின் உடைய ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் இந்து சமய அறநிலையத்துறை காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி பழனி மலை முருகன் கோவிலில் 296 காலி பணியிடங்கள் நிரப்ப இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
பழனி மலையில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை :-
✓ இளநிலை உதவியாளர் – 7
✓ சீட்டு விற்பனையாளர் – 13
✓ சத்திரம் காப்பாளர் – 16
✓ சுகாதார மேஸ்திரி ( மலை கோவிலுக்கு ) – 2
✓ காவல் ( மலை கோவிலுக்கு ) – 2
✓ காவல் ( உபகோவில் மற்றும் உப நிறுவனங்கள் ) – 44
✓ துப்புரவு பணியாளர் ( மலைக்கோவிலுக்கு ) – 54
✓ துப்புரவு பணியாளர் ( உப கோவில்கள் மற்றும் உப நிறுவனங்கள் ) – 104
✓ உதவி பொறியாளர் ( மின்னணுவியல் ) – 1
✓ உதவி பொறியாளர் ( சிவில்) – 4
✓ இளநிலை பொறியாளர் ( ஆட்டோமொபைல் ) – 1
✓ இளநிலை பொறியாளர் ( மின் ) – 1
✓ மாலகட்டி – 05
மொத்தம் 39 வகையான பணியிடங்களில் 296 காலியிடங்கள் நிரப்ப தயாராக இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது.
கல்வித்தகுதி மற்றும் சம்பள விவரம் :-
8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பிஇ/பிடெக் போன்ற படிப்புகளை முடித்தவர்கள் பழனி மலையில் இருக்கக்கூடிய பணியிடங்களில் செய்வதற்காக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் அறிந்து கொள்ளும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியிடங்களுக்கு தகுந்தபடி சம்பளம் மாறுபடும் என்றும், இளநிலை உதவியாளர் பணிக்கு 18,500 முதல் 58,600 வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு 36 ஆயிரத்து 700 முதல் 1,16,200 வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாட்ச்மேன் பணி செய்பவர்களுக்கு 15,900 முதல் 50,400 வரை சம்பளமாக கிடைக்கும் என்று பழனி மலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை :-
இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க விரும்புவார்கள் www.hrce.tn.gov.in மற்றும் www.Palani murugan.hrce.tn.gov.in என்ற திருக்கோவிலின் உடைய இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அல்லது நேரடியாக கோவிலுக்கு சென்று கோவர் அலுவலகத்தில் 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க நினைப்பவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :-
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பழனி,
திண்டுக்கல் மாவட்டம் – 624601.
இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி நாளாக ஜனவரி 8 ஆம் தேதி மாலை 5.45 மணி கூறப்பட்டிருக்கிறது. இந்த காலி பணியிடங்களுக்கான அவகாசம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தகுதியுடையவர்கள் மற்றும் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும் படி இந்து சமய அறநிலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறையானது தகுதியான விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்து விண்ணப்பங்களுக்கு உரியவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைப்பு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பழனி இந்து சமய அறநிலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.